தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் தகவல்
x
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டியுள்ளதால், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வர உள்ளதாக கூறினார். தற்போது 67 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாகவும், அதை 95 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 80 வயது முதியோர்களுக்கு தபால் வாக்களிக்க12டி படிவம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனிடையே புதிய வாக்காளர்கள்  மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்து இன்று மாலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு சத்யபிரதா சாகு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்