கொரோனாவால் மூடப்பட்ட திரையரங்குகள் - ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படங்கள்
பதிவு : டிசம்பர் 31, 2020, 12:53 PM
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகம் முழுக்க திரையரங்கங்sகள் மூடப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகம் முழுக்க திரையரங்கங்sகள் மூடப்பட்டன. இந்த நிலையில் OTT எனப்படும் இணையவழி தளத்தில் திரைப்படங்கள் வெளியாகின. 2020ம் ஆண்டில் நிகழ்ந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு இதோ.OTT-யின் வருகை குறித்து விஸ்வரூபம் படத்தின் ரிலீஸின் போதே பேசியிருந்தார் நடிகர் கமல்ஹாசன்.ஆனால் அப்போது , இதெல்லாம் நம் ஊரில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம்தான் மக்கள் மத்தியில் இருந்தது.

2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டதால், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' OTTயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள், இனி சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகும் படங்களை திரையிட மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர். ஆனால் எதிர்ப்புகளை தாண்டி மே 29ம் தேதி OTTயில் வெளியானது பொன்மகள் வந்தாள். இதேபோல் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த பென்குயின் திரைப்படமும் ஜூன் மாதம் OTT-யில் வெளியானது.

விஜய் சேதுபதி , ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ ரணசிங்கம், மாதவன் அனுஷ்கா அஞ்சலி நடித்த சைலன்ஸ், ஐந்து இயக்குனர்கள் இயக்கத்தில் ஆந்தாலஜி பாணியில் உருவான புத்தம் புது காலை என வரிசையாக OTT-யில் படங்கள் வெளியாகின.ஆனால் இதில் வெற்றிபெற்ற படமாக எதுவுமே பெயர் எடுக்கவில்லை.

இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ம் தேதி OTT-யில் வெளியானது. அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்ட படமாகவும், OTT-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படமாகவும் மாறியது சூரரைப்போற்று.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் OTT-யில் தீபாவளி வெளியீடாக வந்தது.கைதி புகழ் அர்ஜுன் தாஸ் நடித்த "அந்தகாரம்" , வருடத்தின் இறுதியில் 4 இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியான "பாவ கதைகள்" ஆந்தாலஜி, ஜெய் நடித்த "ட்ரிபிள்ஸ்" உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

திரையரங்கங்கள் திறக்கும் வரை படத்தை வெளியாடமல் வைத்திருந்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக OTT-யின் பக்கம் திரும்பும் நிலை உருவானது. அதே சமயம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளை சேர்ந்த ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு எளிய வழியாக OTT இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த வரிசையில் 2021ம் ஆண்டிலும் ஜனவரி 7ம் தேதி மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள "மாறா"திரைப்படமும், ஜனவரி 14ம் தேதி பொங்கல் வெளியீடாக ஜெயம் ரவியின் "பூமி" திரைப்படமும் வெளியாக உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் OTT யில் திரைப்படங்களை வெளியிடும் நிலை உருவானது

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

30 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

31 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

40 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

115 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.