மகனின் குழந்தை பேறுக்காக சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம் - நகை, பணத்திற்காக பெண்ணை வெட்டிக் கொன்ற கொடூரம்
பதிவு : டிசம்பர் 31, 2020, 12:03 PM
மகனுக்கு குழந்தை பேறு வேண்டி பரிகாரம் செய்ய சென்ற பெண் ஒருவர் கொள்ளை கும்பலால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார் 65 வயதான ஆறுமுகம்...இவரின் மனைவி ஈஸ்வரி. 

இவர்களுக்கு உதயா என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது. பேரக் குழந்தைகளை ஆசை தீர கொஞ்ச வேண்டும் என ஆசைப்பட்ட ஆறுமுகமும் அவரது மனைவியும் போகாத கோயில்கள் இல்லை... வேண்டாத தெய்வங்களும் இல்லை...ஆனால் பரிகாரம் செய்தால் மகனுக்கு குழந்தை பிறக்கும் என சிலர் சொன்னதை கேட்டு அதற்கான முயற்சியிலும் இவர்கள் இறங்கி உள்ளனர். இதை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று இவர்களை தேடி வந்துள்ளது. 

குழந்தை பிறப்பதற்காக பரிகாரம் ​செய்து தருகிறோம் என கூறிய அந்த மர்ம கும்பல், ஆறுமுகத்தின் பர்னிச்சர் கடைக்கு அதிகாலையில் வந்துள்ளது. பல மணி நேரமாக பூஜைகளை செய்த அந்த கும்பலின் செயல் சாட்சாத் மந்திரவாதிகளை போலவே இருந்ததாக தெரிகிறது... பூஜைகள் முடிந்துவிட்டது.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கள் என கூறியிருக்கிறது அந்த கும்பல்.. அப்போது ஆறுமுகமும், ஈஸ்வரியும் காலில் விழுந்து மண்டியிட்ட போது தான் அந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது... 

இருவரும் காலில் விழுந்த நேரம் பார்த்து தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் வெட்டிச் சாய்த்தது அந்த கும்பல்... இதில் படுகாயமடைந்த ஈஸ்வரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்... 

பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த அந்த கும்பல், கடையை பூட்டி சென்றுள்ளது. 

படுகாயமடைந்த ஆறுமுகமோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்...

இவர்களை மந்திரவாதிகள் என கூறி நம்ப வைத்தது யார்? பர்னிச்சர் கடைக்குள் வந்து பூஜைகளை செய்தது எப்படி? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பிய முதியவர்களுக்கு அரங்கேறிய இந்த கொடூரம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

248 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

193 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

154 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

131 views

பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்

53 views

பிற செய்திகள்

மருத்துவர் சாந்தா காலமானார்

புற்றுநோய் மருத்துவ நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

22 views

"அனுமதி இல்லா சிலைகளை அகற்ற உத்தரவு" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

28 views

ஜோதிடத்தை நம்பி வீட்டை மாற்றிய தம்பதி - கழிவறை இல்லாத வீட்டுக்கு சென்றதால் விபரீதம்

ஜோதிடத்தை நம்பி வேறு வீட்டுக்கு சென்றதால், 5 வயது மகளை அஸ்திவார குழியில் தேங்கியிருந்த தண்ணீருக்கு பலி கொடுத்திருப்பது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

1085 views

கருத்தரிக்காமல் நாடகம் என வெளியான அம்பலம் - குழந்தை இல்லாததால் ஏற்பட்ட விரக்தியா?

கர்ப்பமானதாக நாடகமாடியதோடு, தனக்கு பிறந்த குழந்தையை அரசு மருத்துவமனை ஊழியர்கள் கடத்திவிட்டதாக திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்...

19 views

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமி - மக்கள் மனம் கவர்ந்த மலை ரயில்

உதகைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மலை ரயில் பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

16 views

அஸ்திவாரம் போடும் குழியில் விழுந்த சிறுமி - தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி பலியான சோகம்

திருச்சியில் மழைநீர் தேங்கிய அஸ்திவார குழியில் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.