தானே புயல் - "10 ஆண்டுகள் ஆகியும் முழுமை பெறாத திட்டங்கள்"

கடலூர் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட தானே புயல் பாதித்து 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அப்போது, அறிவித்த திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு
தானே புயல் -  10 ஆண்டுகள் ஆகியும் முழுமை பெறாத திட்டங்கள்
x
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் வீசிய தானே புயல் கடலூர் மாவட்டத்தை நிலைகுலையச் செய்தது. மிகப் பெரிய அளவிலான பொருட் சேதத்தை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை தானே புயல் புரட்டி போட்டது. ஆவேசமாக சீறிப்பாய்ந்த காற்றால், 2 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.   ஆயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன. 5 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களும் 48 ஆயிரம் மின் கம்பங்களும் சேதம் அடைந்தன. கோரத்தாண்டவம் ஆடிய தானே புயல் காரணமாக  பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த  மா, பலா, வாழை, தென்னை, முந்திரி பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. கரைகளில் நிறுத்தப்ப்டடு இருந்த ஏராளமான படகுகளும் கடலுக்குள் காணாமல் போனது,. கோர தாண்டவம் ஆடிய, 'தானே' புயல் பாதித்து 10 ஆண்டுகளான போதிலும், கடலூர் மக்களுக்கு அறிவித்த திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,. 


Next Story

மேலும் செய்திகள்