குடிசை வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் விரக்தி - பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்த போது நடந்த விபரீதம்

கன்னியாகுமரி அருகே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேருக்கு நேர்ந்த சம்பவம் பார்ப்போரை பதற வைக்கிறது...
குடிசை வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் விரக்தி - பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்த போது நடந்த விபரீதம்
x
பார்ப்போரை பதற வைக்கும் இந்த காட்சி அரங்கேறி இருக்கும் இடம் தமிழக கேரள எல்லைப்பகுதியில்.... நெய்யாற்றின்கரை நெல்லிமூடு பகுதியை சேர்ந்வர் ராஜன். இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு ராஜனுக்கு எதிராக வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜனை அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு நீதிமன்றமும் உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ராஜனுக்கு சொந்தமான குடிசை வீட்டை அதிகாரிகள் ஜப்தி  செய்ய முயன்ற போது ராஜன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்யவும், மாற்று வீடு தேடவும் அவகாசம் வழங்குமாறு அவர் கெஞ்சியும் வந்தவர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை என தெரிகிறது. பல முறை கேட்டுப்பார்த்தும் ஜப்தி செய்வதிலேயே குறியாக இருந்தவர்களை மிரட்டுவதற்காக தன் மீதும் தன் மனைவி அம்பிலியின் மீதும் பெட்ரோலை ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தார் ராஜன்... மேலும் கையில் லைட்டரை பற்ற வைத்தபடி அவர் மிரட்டல் விடுப்பதை பார்த்த போலீசார் அதை தட்டி விடவே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது அந்த விபரீதம்... தட்டி விட்ட லைட்டரானது பெட்ரோலில் நனைந்தபடி நின்ற 2 பேர் மீதும் பற்றியதில் அவர்கள் இருவரின் அலறல் சத்தமும் பார்ப்போரை குலைநடுங்க வைத்தது. பலத்த தீக்காயங்களுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின்போது அங்கு பேசிய ராஜன், மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை ​முயற்சி மேற்கொண்டதாக கூறினார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி ராஜனும், தொடர்ந்து அவருடைய மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்...இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்