தமிழகத்திற்குள் நுழைந்த உருமாறிய கொரோனா - கண்காணிப்பை தீவிரப்படுத்திய தமிழக சுகாதார துறை

உருமாறிய கொரோனோ சென்னையிலும் கண்டறிபட்ட நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்
தமிழகத்திற்குள் நுழைந்த உருமாறிய கொரோனா - கண்காணிப்பை தீவிரப்படுத்திய தமிழக சுகாதார துறை
x
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய NOVAL கொரோனோ வைரஸ் மனிதர்களிடையே நேரடி தாக்குதலை ஏற்படுத்தி வேகமாக பரவும் கொடிய தொற்று நோயாக பார்க்கப்படுகிறது.......இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனோவில், பெரும்பாலான ஆர்என்ஏ மூலக்கூறுகள் உருமாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்தது.

மனித செல்களில் எளிதில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்த N501 என்ற மூலக் கூறுகள் மற்றும் ஸ்பைக் நீட்சிகளை கொண்ட  உருமாறிய கொரோனோ வைரஸ்,  70% அளவிற்கு அதிக திறனுடன் நோய் பரவலை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, பல உலக நாடுகளும் இங்கிலாந்துடனான விமான சேவைகளை ரத்து செய்த‌துடன், அடுத்தகட்ட ஊரடங்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்தியாவை பொருத்தவரை பிரிட்டன் விமான சேவையை வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.   இதற்கிடையே, பிரிட்டனில் இருந்து வந்த 2 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட  பயணிகளில் இதுவரை ஆயிரத்து 582 அடையாளம் காணபட்டு பரிசோதனை செய்ததில், 19 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கும் கொரோனோ  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் சளி மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்தபோது,   சென்னையை சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்திலும் நுழைந்து விட்டது உருமாறிய கொரோனா... இது குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ண‌ன், அந்த நபருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் அவரது தொடர்பில் இருந்தவர்களை டிராக் செய்யும் முறை குறித்து விளக்கினார். 

இதேபோல, பிரிட்டனில் இருந்து வந்த 500 பேரை தேடுவதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்தும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். வைரஸ்களின் உருமாற்றம் என்பது இயல்பான ஒன்றே என தெரிவிக்கும் சுகாதார துறையினர்  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தாலே கொரோனே பரவலை தடுத்திட முடியும் என கூறுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்