மயிலாடுதுறை மாவட்டத்தின் தொடக்க விழா - முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் தொடக்க விழா - முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக, பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கியது. மேலும், மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து, தனி மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தின் நான்கு வருவாய் வட்டங்களை இணைத்து, புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை, நாளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக, முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்