நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
பதிவு : டிசம்பர் 27, 2020, 09:30 AM
தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளின் நஞ்சுக்கொடியிலும் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்ற மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது...
ஒரு தாயையும்-சேயையும் பிணைக்கும் முதல் இணைப்புதான் நஞ்சுக்கொடி... இதுதான் ஒரு பெண் கருவுற்றதும் அவருடைய உடலின் ஒரு அங்கமாக மாறும் சிசுவுக்கு ஊட்டச்சத்தை இரத்தமாக கொண்டு செல்கிறது.

ஆங்கிலத்தில் பிளசென்டா என அழைக்கப்படும் இந்த நஞ்சுக்கொடி, தாயிடம் இருந்து குழந்தைக்கு எந்தஒரு தொற்றும் பரவாமலும்... வீரியம் கூடிய மருந்துகளின் விளைவுகளை அண்டவிடாமலும்  பாதுகாக்கிறது

இத்தகைய மகத்தான பணியை செய்யும் இந்த நஞ்சுக்கொடியிலும் தற்போது பிளாஸ்டிக் துகள்கள் நுழைந்து இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய தகவல்... 

இத்தாலியில் குழந்தை பெற்ற 6 பெண்களின் நஞ்சுக்கொடியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், 4 பெண்களின் நஞ்சுக்கொடிகளில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
   
ஒவ்வொரு நஞ்சுக்கொடியிலும் வெறும் 4 சதவீத பகுதியை மட்டுமே ஆய்வு செய்ததாகவும்... அதிலே சுமார் 12 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது எனக் கூறியிருக்கும் விஞ்ஞானிகள், நாங்கள்  முழுவதையும்  பகுப்பாய்வு செய்திருந்தால் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்று திகைக்கிறார்கள். 
 
பல வண்ணங்களில் இருந்த இந்த பிளாஸ்டிக் துகள்கள் உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டவையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.வெறும் 10 மைக்ரான் அளவு கொண்ட இந்த பிளாஸ்டிக் துகள்களால் குழந்தைக்கு செல்லும் ரத்தத்தில் பயணிக்கலாம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் துகள்கள் சுவாசம், நீர், உணவு வாயிலாக தாய்மார்களின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.  
 
இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா கூறுவதை கேட்கலாம்...இன்று பூமியில் உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழமான பெருங்கடல் வரையிலும் வியாபித்திருக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்... மனிதன் வீசியெறியும் இவை உணவு, காற்று மற்றும் நீர் வழியாக அவனுக்கே திரும்பி வந்து விடுகிறது என்பது பல ஆய்வுகளில் வெளியாகியிருக்கும் உண்மை... மனித குலத்தின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு ஏதும் அறியாத பூமியில் ஜனனிக்க காத்திருக்கும் ஒரு சிசுவும் விலைகொடுக்க தொடங்கியிருக்கிறது என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயமாகும்....


தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

18 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

25 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

64 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

33 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

106 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.