அம்மணாங்குப்பம் ஏரியில் நிரம்பியுள்ள கழிவு நீர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் ஏரியில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
அம்மணாங்குப்பம் ஏரியில் நிரம்பியுள்ள கழிவு நீர்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் ஏரியில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.  குடியாத்தம் நகர் அருகே உள்ள 80 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியில், குடியாத்தம் நகராட்சி மற்றும் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் கால்வாய் மூலம், கழிவுநீர் திருப்பிவிடப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதியினர், துர்நாற்றம் வீசுவதால் கடும் அவதி அடைந்துள்ளதாகவும் கூறினர். ஏரியின் கழிவுநீரை வெளியேற்றி, மோர்தானா அணையில் இருந்து வரும் மழைநீரை தேக்கி வைக்குமாறு அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்