முதுமலை வழியே பாதயாத்திரை செல்லத் தடை - வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் நடவடிக்கை

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதுமலை வனப்பகுதி வழியே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை வழியே பாதயாத்திரை செல்லத் தடை - வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் நடவடிக்கை
x
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதுமலை வனப்பகுதி வழியே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக நடந்து முதுமலை வனப் பகுதி வழியாக சபரிமலை செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்கும்  நிலை உள்ளது. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதுமலை  வழியாக செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதயாத்திரை செல்ல விரும்பினால் 10 பேர் கொண்ட குழு  வாகனத்துடன் வந்தால் மட்டுமே அனுமதி தரப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்