ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் - ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை புதிய அறிக்கையில் தகவல்

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் - ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை புதிய அறிக்கையில் தகவல்
x
இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி , மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவருவதால்  அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் அப்பலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்