ஆயுதப்படை காவலர் விஷம் அருந்தி தற்கொலை - தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம்
சென்னையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பழைய வண்டி பாளையத்தை சேர்ந்த சுரேஷ் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 16ஆம் தேதி முதல் பணிக்கு வராத சுரேஷ் பெரியமேட்டில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார். அவரின் அறை கதவு நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த உணவக விடுதி ஊழியர்கள் வேறு சாவியை போட்டு கதவை திறந்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய நிலையில் சுரேஷ் இறந்துகிடக்க, அவர் அருகில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story