வேளாண் சட்டம் : "குறைந்தபட்ச ஆதரவு விலை நிச்சயம் உண்டு" - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஆதார விலைக் கொள்கை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
வேளாண் சட்டம் : குறைந்தபட்ச ஆதரவு விலை நிச்சயம் உண்டு - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
வேளாண் சட்டம் குறித்து செங்கல்பட்டு மாவட்டம் மறைம​லைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைபடி, வேளான் விலை பொருள் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக  கூறினார். மத்திய அரசின் சட்டத் திருத்தப்படி, வேளாண் உற்பத்தி விலையில் கூடுதலாக 50 சதவீத விலையுடன் சேர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கபடுவதாக கூறினார். சட்டத்தின் மூலம், அதிகம் பயன்பெறுவது பஞ்சாப் விவசாயிகள்தான் என கூறியுள்ள பிரகாஷ் ஜவடேகர், பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறினார். மற்ற மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொது வெளியில், ராகுல்காந்தியுடன் வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க பாஜக தயார் என்றார். விவசாய கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்ற அவர், தேவை ஏற்ப்பட்டால் கொள்முதல் நிலையங்களில் விற்கலாம் என்றும், கூடுதல் விலை கிடைக்கும் எந்த இடத்திலும் விற்கலாம் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்