கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
சென்னை-மயிலை உயர்மறை மாவட்டம் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று இயேசு பிரானை வழிபட்டனர்.  ஆராதனையின் போது இயேசு பிறந்ததை உலகுக்கு உணர்த்தும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசுவை ஏந்தி வந்து, தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு குடிலில்  வைத்து வணங்கினர். ஒவ்வொரு முறையும் சாந்தோம் தேவாலயத்தில் 3000 பேர் வரை பங்கேற்று கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 200 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு சிறப்பு ஆராதனையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.


வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் : அரசு வழிகாட்டின் படி திறந்த வெளியில் கொண்டாட்டம்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  

ஆண்டு தோறும் வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில்  நடைபெற்று வந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம்,  இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக அரசின் வழிகாட்டின்படி சேவியர் திறந்தவெளி கலையரங்கில்  நடைபெற்றது. கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலியில் இயேசு கிறிஸ்து உலகில் பிறந்த நற்செய்தி வாசிக்கப்பட்டது. அப்போது குடிலில் பிறந்த ஏசு கிறிஸ்துவுக்கு பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர். பின்னர் குழந்தை இயேசு பிறப்பின் போது மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும் இனிப்புகள் வழங்கியும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
 


Next Story

மேலும் செய்திகள்