"திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடத்தலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனமதி வழங்கியுள்ளது.
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க தடை கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, பிரம்ம தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்துள்ளதாகவும், சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர இதர 48 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி வழங்கினார். விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். 

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு அனுமதி 

சனிப்பெயர்ச்சி விழா நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
வரும் 27ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சியடைகிறது. அன்றைய தினம் திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள், புனித நீராடி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, சனி பகவானை வழிபடுவார்கள். 


Next Story

மேலும் செய்திகள்