ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டதாக புகார் : அதிமுக முன்னாள் நிர்வாகி மீது டிஜிபியிடம் புகார் மனு
பதிவு : டிசம்பர் 24, 2020, 09:06 AM
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவிராமன் என்பவருக்கு சொந்தமாக போளூர் சாலையில் 7188 சதுர அடி அளவுள்ள காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரான பெருமாள் நகர்  ராஜன் கட்சி  அலுவலகத்திற்காக வாடகைக்கு எடுத்ததாகக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக அந்த நிலத்திற்கு வாடகை கொடுக்காமல் இருந்ததால் சஞ்சீவிராமன் பலமுறை கேட்டுள்ளார். போலீசில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். இதில் தன்னுடைய நிலத்தை மீட்டு தருவதோடு, பெருமாள் நகர் ராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

172 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

36 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

333 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.