குரூப்-1 தேர்வில் புதிய நடைமுறை: "பதிவு எண்ணை தவறாக நிரப்பினால் 2 மதிப்பெண் கழிக்கப்படும்" - டி.என்.பி.எஸ்.சி.

குரூப் ஒன் தேர்வில் பதிவு எண்ணை தவறாக நிரப்பினால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வில் புதிய நடைமுறை: பதிவு எண்ணை தவறாக நிரப்பினால் 2 மதிப்பெண் கழிக்கப்படும் - டி.என்.பி.எஸ்.சி.
x
தமிழகத்தில் வரும் ஜனவரி 3ம் தேதி, குரூப் ஒன் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் தேர்வர்கள், தங்களுடைய ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்தால் மட்டுமே, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
 
மேலும், குரூப் ஒன் தேர்வில், ஓ.எம்.ஆர் ஷீட்டில் பதிவெண்ணை  தவறாக நிரப்பினால் இரண்டு மதிப்பெண்களும், கேட்கப்பட்டுள்ள விடைகளைத் தாண்டி விடைகள் நிரப்பப்பட்டிருந்தால் பெறுகின்ற  மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண்களும் கழிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற முறைகேட்டை தொடர்ந்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


Next Story

மேலும் செய்திகள்