தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக திமுக வழக்கு விசாரணை ஜன.7-க்கு ஒத்திவைப்பு
80 வயது முதியோரும் மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்களிக்கும் முறையை எதிர்த்த வழக்கின் விசாரணை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 80வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும், தபால் வாக்குப் பதிவு செய்யும் வசதியை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசுக்கு பொருளாதார சுமை அதிகரிக்கும் எனவும், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி, இந்த முடிவுக்கு தடை விதிக்கக் கோரி இருந்தார்.
நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜனவரி7க்கு தள்ளிவைக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story