"பொங்கல் பரிசுத் தொகுப்பு - டிச. 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம்" - தமிழக அரசு

2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26 முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு - டிச. 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம் - தமிழக அரசு
x
2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 26 முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு,1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, உள்ளிட்ட  பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கத் தொகை 2500 ரூபாய் வழங்க தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த, அனைத்து ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்து துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் ரொக்கத் தொகை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும், ஆட்சியரை சாரும் என தெரிவித்துள்ளது. அதன்படி, விநியோக பணியினை ஜனவரி 4-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும், கூறியுள்ளது.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நியாய விலை கடை பணியாளர்கள் வீடு தோறும் சென்று,டோக்கன்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு பொங்கல் பரிசினை விரைந்து விநியோகம் செய்ய கூடுதல் பணியாளர்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்