"புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி" - தெற்கு ரயில்வே

இன்று 23ம் தேதி முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே
x
இன்று 23ம் தேதி முதல் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. ரயில்வே பணியாளர்களுக்கென தெற்கு ரயில்வே புறநகர் சிறப்பு ரயில்களை பொதுமுடக்க நாட்களில் இயக்கி வந்தது. தளர்வுகளுக்கு பின்னர், முதற்கட்டமாக, அத்தியாவசிய பணியாளர்கள் புறநகர் சிறப்பு ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக, பெண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது, மூன்றாம் கட்டமாக கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இனிமேல் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும்,  மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்