மது மயக்கத்தால் நேர்ந்த பயங்கரம் - முதியவரை தீயிட்டு கொளுத்திய 5 சிறுவர்கள்
பதிவு : டிசம்பர் 22, 2020, 04:50 PM
சாலையோரம் தூங்கி கொண்டிருந்த முதியவரை எழுப்பி லைட்டர் கேட்ட சிறுவர்கள் மது போதையில் அந்த முதியவரையே தீயிட்டு கொளுத்தி கொன்றுள்ளனர்...
60 வயதான அந்த முதியவர் பெயர் சந்திரன்... நாகர்கோவில் அருகே உள்ள இருளப்ப‌புரத்தை சேர்ந்தவர்... பத்தாண்டுகளுக்கு முன் மனைவி மகன்களுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம் சந்திரன்.. அன்று முதல், பகலில் கூலிவேலை, இரவில் கிடைக்கும் இடத்தில் உறக்கம் என பொழுதை கழித்து வந்த சந்திரன், திடீரென உடல் பாதி எரிந்த நிலையில் ஒரு வீட்டு முன் பிணமாக கிடந்தார்...

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் முதியவரை கொடூரமாக எரித்து கொன்றது வெளிச்சத்துக்கு வந்த‌து... 

சம்பவத்தை அறிந்த போலீசார், சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மதுரையை சேர்ந்த இந்த 5 சிறுவர்களும், பழைய இரும்பு கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்... சம்பவத்தன்று, ஒரு சிறுவன் தன் காதலியுடன் சண்டையிட்டு விட்டானாம்... இதன் காரணமாக அந்த சிறுவன் சக நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்துள்ளான்... இதை தொடர்ந்து 5 பேரும் சாலையில் வரும் வழியெங்கும் கார், வீட்டு ஜன்னல் என கண்ணில் பட்ட இடங்களை எல்லாம் கல் ஏறிந்து சேதப்படுத்தியுள்ளனர்... 

அப்போது தான் சாலையோரம் கிடந்த அந்த அப்பாவி முதியவர் இவர்களது கண்ணில் பட்டுள்ளார்... முதியவரிடம் சென்று தீப்பெட்டி கேட்டுள்ளனர்.  

விபரீத‌த்தை அறியாத முதியவர் சந்திரன், தீப்பட்டி இல்லை, லைட்டர் தான் இருக்கிறது என அப்பாவியாய் கூறி இருக்கிறார்... 
இதையடுத்து அவரிடம் இருந்து லைட்டரை வாங்கிய சிறுவர்கள், வேட்டியில் தீயை வைத்துவிட்டு கொஞ்சமும் அச்சமின்றி அங்கிருந்து நடந்து சென்றிருக்கின்றனர்.. 5 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

ஈவு இறக்கமின்றி முதியவரை தீயிட்டு கொளுத்தி கொடூரமாக கொன்றனர் என்பதை விட, இளம் பிஞ்சுகளை சுய நினைவை இழக்க செய்து, முதியவர் உயிரை பலிகொண்ட மது மயக்கம்,  இன்று அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்....

தொடர்புடைய செய்திகள்

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

232 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

197 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

சட்டமன்ற தேர்தல் - அலுவலர்களுக்கு பயிற்சி சத்யபிரதா சாகு துவக்கி வைத்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மணி நேரம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

30 views

போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

31 views

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் பயங்கரம்

சீர்காழி அருகே நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகனை 16 கிலோ தங்க நகைகளுக்காக வெட்டிக் கொலை செய்த வடமாநில கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

81 views

சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

40 views

முடிவுக்கு வந்த 4 ஆண்டு சிறைவாசம் - விடுதலையானார் சசிகலா

சொத்து வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானார்.

115 views

இந்து கடவுள் பற்றி இழிவாக பேசுவதாக புகார் - திராவிடர் கழக கூட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திராவிடர் கழகம் சார்பில் கூட்டம் நடத்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.