சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அடுப்பை வைத்து சமைக்கும் வகையில் போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும், அப்போது உயர்த்தப்பட்ட விலையைத் திரும்பப் பெறுமாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Next Story