சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் மர்மம் - மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைக்கும் உறவுகள்

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அவரது பெற்றோரும், கணவர் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது உண்மையில் நடந்தது என்ன? என்ற கேள்வியை சராசரி மக்களை கேட்க வைத்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் மர்மம் - மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைக்கும் உறவுகள்
x
சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 9ஆம் தேதி உயிரிழந்த நாளில் இருந்தே அவரின் மரணம் தொடர்பான பல்வேறு தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது... 

என்ன தான் நடந்தது சித்ராவுக்கு? சின்னத்திரை ரசிகர்கள் கலங்கித் தவிக்கும் அளவுக்கு அவரின் மரணம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது...  

சித்ராவின்  மரணத்திற்கு கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்... சித்ராவின் தோழிகளும் இதே கருத்தை தெரிவிக்கவே, முதல் நாளில் இருந்தே விசாரணை வளையத்திற்குள் இருந்தார் ஹேம்நாத்... ஒரு கட்டத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். அடுத்து ஆர்டிஓ நடத்திய விசாரணையும் முடிவடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் ஹேம்நாத்...

மகன் சிறைக்கு சென்றதை தொடர்ந்து ஹேம்நாத்தின் பெற்றோர் அடுத்தடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிரடி ரகம்... 

சித்ராவின் மரணத்தில் ஒரு தலைபட்சமாக விசாரணை நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டை முன்வைத்த ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், சித்ராவின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினால் தான் நடந்த அத்தனை உண்மைகளும் வெளிவரும் என பகீர் கிளப்பியுள்ளார்...

இதனிடையே சித்ராவும், ஹேம்நாத்தும் ஒன்றாக செல்லும் சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி உள்ளது.... தங்களுக்கு திருமணம் நடக்க இருந்ததாக சொல்லப்படும் மண்டபத்தை 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பார்த்த சிசிடிவி வீடியோ தான் அது....  

அதேநேரம் தனது மகனுக்கு தோஷம் இருப்பதாக கூறி அதனை திருவான்மியூரில் உள்ள கோயிலில் வைத்து சரிசெய்த பின்பு தான் சித்ரா குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார் ஹேம்நாத்தின் தந்தை...

சித்ராவின் மரணம் தொடர்பாக அவரின் தோழிகள் மற்றும் பெற்றோரிடம் முறையாக விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரலாம் என்பதும் அவர் வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது...

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வரை ஹேம்நாத்துடன் சித்ரா மகிழ்ச்சியாகத் தான் இருந்தார் என கூறும் அவர், மகன் கைது செய்யப்பட்டதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் உள்ள உரையாடல்கள் மற்றும் பதிவுகள் எல்லாம் சித்ராவின் மரணத்தில் அனுதினமும் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றன...

Next Story

மேலும் செய்திகள்