இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் - டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க தீவிரம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து, மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் - டி.ஆர்.பாலு கடும் கண்டனம்
x
ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை ஒழிக்க தீவிரம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்து, மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். மேலும் குழுவின் பரிந்துரைகளை, நிராகரித்து  மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை, ஒரு சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்பிட  வேண்டுமென்றும், மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென்றும் டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐஐடியில் இட ஒதுக்கீடு குறித்து ஆராய குழு/"குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்"/மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ஐஐடியில் இட ஒதுக்கீடு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐ.ஐ.டி பேராசிரியர்  பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை மொத்தமாக ரத்து செய்வதற்கு பரிந்துரை அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ராம்கோபால் ராவ் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான அரசின் சமூகப் பொறுப்பை புறம்தள்ளும் பிற்போக்குத்தனத்தைக் கொண்டதாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுனெம கடிதம் எழுதி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்