"சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஜிகே  வாசன் வேண்டுகோள்
x
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கட்சி சார்பில், சென்னையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய வாசன், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்  என வலியுறுத்தினார். அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக கூறிய வாசன், பாஜக மாநிலத் தலைவர் முருகனின் கருத்துக்கு பதிலளித்தார். அதில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த அதிமுக, அதன்படி தேர்தலை சந்திக்க உள்ளதாக விளக்கமளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்