அமலுக்கு வரும் ஜிபிஎஸ் நடைமுறை - நேர, கால விரயத்தை குறைக்க நடவடிக்கை

இனி இல்லை சுங்கச்சாவடிகள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு மூலம் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருப்பதால் தனிநபர்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமலுக்கு வரும் ஜிபிஎஸ் நடைமுறை - நேர, கால விரயத்தை குறைக்க நடவடிக்கை
x
தொழில் நுட்ப வளர்ச்சி அன்றாட வாழ்வில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றாலும், அது தனிமனிதனின் சுதந்திரத்தை பறித்து வருகிறது என்றால் அது மிகையல்ல,. மேலும் அது ஒவ்வொருவரின் அந்தரங்கத்தை வேவு பார்க்க தொடங்கியுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது

ஸ்மார்போன், லேப்டாப் மற்றும் கணினி வழியே ஊடுருவும் ஹேக்கர்கள் தனிபட்ட நபரின் அந்தரங்க விஷங்களை அப்படியே கடைபரப்பி  காசு பார்த்து வரும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு கணமும் அரங்கேறி வருகிறது...

அதேபோல் விதிமீறல், திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகின்றன,.. இத்தகைய கேமராக்களை தவறான நோக்கத்துடன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்

அதேபோல் தனிநபர் வங்கியில் இருக்கும் பணத்தையும் தொழில்நுட்ப உதவியுடன் அப்படியே அபேஸ் செய்யும் நிகழ்வுகளும் நிகழாத நாட்கள் இல்லை...இப்படி தனிமனிதனை ஒவ்வொரு தொழில்நுட்பமும் கண்காணித்தும் பின்தொடர்ந்தும் வருகின்றன...

இந்த நிலையில் இனி இல்லை சுங்கச்சாவடிகள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு மூலம் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்படும் என்பதால் தனிநபர்களின் அந்தரங்க உரிமை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

போக்குவரத்து நெரிசல், நேரவிரயம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது...

சுங்கச்சாவடிகள் இல்லாதபட்சத்தில் சுங்க கட்டணம் எப்படி வசூலிக்கப்படும் என்கிற கேள்வி எழலாம். அதற்காகவே வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு,. நெடுஞ்சாலையில் நமது வாகனம் செல்லும் பட்சத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் தனிநபர் கணக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படும் நடைமுறையும் அமலாக்கப்படவுள்ளது

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமாக அமைவதுடன் சுங்கக் கட்டண வசூல் பெருமளவில் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் நேர விரையம் இதனால் மிச்சம் ஆனாலும் வங்கிக் கணக்கில் நேரடியாகவே பணம் எடுக்கப்படும்போது அவை சரியாக எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது,. மேலும்  ஜிபிஎஸ் மூலம் வாகன நகர்வு கண்காணிக்க படுவதால் தனிநபர்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படுதல் உள்ளிட்ட ஐயங்களும் எழாமலில்லை...

ஆங்காங்கே மறைந்து இருந்து கண்காணித்து வரும் சிசிடிவி கேமராக்களிடம் இருந்து தப்பித்து சென்றாலும், ஜிபிஆர்எஸ் நம்முடன் நமது காரில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணிக்கும்... நாம் எங்கு செல்கிறோம் என உளவு பார்க்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..


Next Story

மேலும் செய்திகள்