நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை நிறைவு

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஒருதலைபட்சமான விசாரணை நடப்பதாக அவரின மாமனார் பகீர் புகாரை முன்வைத்துள்ளார்.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்டிஓ விசாரணை நிறைவு
x
சின்னத்திரையில் முல்லையாக மனம் கவர்ந்த சித்ரா, கடந்த 9 ஆம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டதில் இருந்தே பரபரப்பும் பல கேள்விகளும் அடுத்தடுத்து எழுந்து கொண்டே இருக்கிறது... 

சித்ராவின் மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்ததில் இருந்தே பரபரப்பும் பற்றிக் கொண்டது. அப்படி என்றால் சித்ராவின் இந்த முடிவுக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுந்த நிலையில் முதலில் விசாரணை வளையத்திற்குள் வந்தவர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான்... 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஹேம்நாத், சித்ராவை வார்த்தைகளால் துளைத்தெடுத்தார், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை குத்திக்காட்டினார் என பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி முதலே ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

தொடர்ச்சியாக 6 நாட்கள் விசாரணைக்கு பின்னர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேம்நாத்தை ஆர்டிஓ விசாரணைக்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை.

Next Story

மேலும் செய்திகள்