"மின்வாரியத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை கிடையாது" - மின்வாரிய தலைமை பொறியாளர் உத்தரவு
பதிவு : டிசம்பர் 17, 2020, 06:00 PM
ஐடிஐ படித்தவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை கிடையாது என்றும், அனைத்து வேலைகளையும் தனியாருக்கு வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஐடிஐ படித்தவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை கிடையாது என்றும், அனைத்து வேலைகளையும் தனியாருக்கு வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரியத்தின் இந்த அறிவிப்பு, ஐடிஐ படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஆட்களை நியமித்து கொள்ள அனுமதி அளித்துள்ள மின்சார வாரியம்,1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மூலம் நியமனமாகும் ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரத்து 360  ரூபாய் ஊதியம் வழங்கவும், ஆண்டுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு என்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்ட உத்தரவில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.