யாரை காப்பாற்ற கைது? - ஹேம்நாத் தந்தை கேள்வி - சர்ச்சை எழுந்த நிலையில் போலீசார் விளக்கம்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், யாரை காப்பாற்றுவதற்காக ஹேம்நாத்தை கைது செய்தீர்கள் என அவரது தந்தை கேள்வி எழுப்பிய நிலையில், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
கடந்த 9ஆம் தேதி அதிகாலை, தனியார் ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்தார், சின்னத்திரை நடிகை சித்ரா..சடலத்தை கைப்பற்றி போலீசார், அவருடன் தங்கி இருந்த கணவர் ஹேம்நாத்திடம், நசரத்பேட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.போலீஸ் விசாரணை ஒரு புறம் தொடர மறுபுறம் ஆர்.டி.ஓ விசாரணை நடந்தது. சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்தது. ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற இருந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், நாளைய தினம் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து விசாரணை செய்ய ஆர்டிஓ முடிவு செய்துள்ளார்.இதனிடையே, யாரை காப்பாற்ற ஹேம்நாத்தை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன் கைது செய்தனர் என, ஹேம்நாத்தின் தந்தை கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், ஹேம்நாத் கைது தொடர்பாக போலீசார் தரப்பில் ஒரு புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...சின்னத்திரை தொடரில், நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது எனக்கூறி, தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துகிறார் ஹேம்நாத் என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் நடிகை சித்ரா முறையிட்டிருக்கிறார். சித்ரா செல்போனில் பேசிய ஆடியோ பதிவு அழிந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தற்போது அதை எடுத்துள்ளது, காவல்துறை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு, அந்த ஆடியோ தான் ஆதாரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ விவகாரம், சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story