ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத16 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
'ஸ்ரீபதி அசோசியேட்ஸ்' என்ற பிரபல கட்டுமான நிறுவனம், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்களை கட்டி உள்ளது. அந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பேருந்துகளையும் இயக்கி வருகிறது.இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்யதாக கூறி, கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கணக்கில் வராத 16 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தொடர்ந்து நடந்து வரும் சோதனை முடிந்த பிறகு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் தெரியவரும்.
Next Story