நாமக்கல்லில் முட்டை விலை அதிகரிப்பு - முட்டை விலை ரூ.4.80 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 40 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல் மாவட்டத்தில், தினசரி மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யபடுகின்றன. அங்கு உற்பத்தியாகும் முட்டைகளின் விலையை, நாமக்கல் தேசிய முட்டை விலை நிர்ணயக் குழு நிர்ணயம் செய்கிறது.
கடந்த 7-ஆம் தேதி 4 ரூபாயாக இருந்த முட்டை விலை, கடந்த10-ஆம் தேதி 15 காசுகள் அதிகரிக்கப்பட்டது.இதேபோல், கடந்த 12 ம் தேதி 25 காசுகள் அதிகரிக்கப்பட்டு, 4 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 40 காசுகள் அதிகரிக்கப்பட்டு 4 ரூபாய், 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால், தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்து வருவதாக தேசிய முட்டை விலை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் கூறி உள்ளார்
Next Story