10,906 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு - நாளை நடைபெறுவதை ஒட்டி முன்னேற்பாடுகள் தயார்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நாளை, 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. எழுத்து தேர்வு முற்பகல் 11 மணியளவில், துவங்கி, மதியம் 12 இருபதுக்கு நிறைவு பெறும். சென்னையில் மட்டும், அண்ணா பல்கலைகழகம், பச்சையப்பன் கல்லுாரி உள்பட, 35 மையங்களில், 29 ஆயிரத்து, 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
Next Story