ஆழ்கடல் மீன்பிடி படகுகள், பதிவு சான்று, மற்றும் சாவிகளை 7 மீனவர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர்
ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ் மற்றும் சாவிகளை முதலமைச்சர் பழனிசாமி ஏழு மீனவர்களுக்கு வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில், முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இழுவைப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ், இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். புதுக்கோட்டை, நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏழு மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி படகுகள், பதிவு சான்றிதழ், சாவி ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறைக்கான தேசிய விருதை முதலமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Next Story