"சித்ரா தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம்" - போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
கணவர் ஹேம்நாத், மற்றும் தாய் விஜயா ஆகியோர் கொடுத்த மன அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் மரணம் கொலை தான் என அவரது தாய் தரப்பில் அதிரடியான புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தற்கொலை தான் என உறுதியானது. இதனிடையே தற்கொலைக்கு யார் காரணம் என போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது தான் சித்ராவின் தாய் விஜயா, கணவர் ஹேம்நாத் என இருதரப்பும் கொடுத்த மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது. குடிப்பழக்கம் கொண்ட ஹேம்நாத், அடிக்கடி சித்ராவிடம் பிரச்சினை செய்து வருவதும், படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சண்டையிட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதேநேரம் கணவரை விட்டு பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா கொடுத்த நிர்பந்தமும் சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டு உள்ளதா? என அறிய சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வது நாளாக ஹேம்நாத்திடம் போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story