ஊழல் புகார், ஊழல் எதிர்ப்பு மையமாக மாறும் தமிழக தேர்தல் களம்

சட்டமன்ற தேர்தலில் மையப் பொருளாக ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் முன்வைக்கப்படுவதை கட்சிகளின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கின்றன.
ஊழல் புகார், ஊழல் எதிர்ப்பு மையமாக மாறும் தமிழக தேர்தல் களம்
x
2021 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே பரபரக்கும் குற்றச்சாட்டு கணைகளை ஏவி வருகிறது. 

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தை ஆரம்பித்த திமுக, ஆளும் அதிமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.. டெண்டர் ஊழல், கொரோனா நிவாரண பொருட்களில் ஊழல் செய்ததாக அதிமுக மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்... 

திமுக குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊழல் கட்சியே திமுக தான் என்றும், அவர்களின் 2 ஜி விவகாரம் ஊரறியும் என்றும் காட்டமாகவே விளக்கம் அளித்தார். 

ஆனால் 2ஜி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவோ, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று பதில் அளித்துள்ளார்.. ஜெயலலிதா மீதான சொத்து வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று என்றும் சுட்டிக் காட்டினார்...  

திமுக குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2 ஜி ஊழலில், ஈடுபட்டு இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஆ.ராசா என குற்றம் சாட்டினார்.

"ஆ.ராசா, மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு"

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஊழல் புகார்களை முன்வைக்கும் நிலையில் புதிய கட்சிகளும் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கின்றன. ஊழலை எதிர்ப்பதே முக்கிய நோக்கம் என்ற உறுதிமொழியுடன் களத்தில் இறங்கி இருக்கிறது மக்கள் நீதி மய்யம்... 

இதேபோல் கடந்த சில தேர்தல்களை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சியும் ஊழலற்ற ஆட்சி என்பதே இலக்கு என வலியுறுத்தி வருகிறது... 

இது ஒரு பக்கம் என்றால் நடிகர் ரஜினியோ வரும் தேர்தலில், ஊழலற்ற, மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என கூறியிருக்கிறார்... 

ஊழல் எதிர்ப்பு முழக்கம் தேர்தல் களத்தின் மையமாக இருக்கும் நிலையில் ஊழல் ஒழிப்பில் மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு காலம் பதில் சொல்லும்...  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கரம் கோர்த்தால் விடிவு கிடைப்பது நிச்சயம்.... 



Next Story

மேலும் செய்திகள்