"திருமாவளவன் மட்டும்தான் பெண்களை பேசினாரா?"- நீதிபதிகள் சரமாரி கேள்வி
பெண்களை மநு ஸ்மிருதி இழிவாக கூறியுள்ளதாக பேசிய திருமாவளவன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
பெண்களை மநு ஸ்மிருதி இழிவாக கூறியுள்ளதாக பேசிய திருமாவளவன் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். சென்னையை சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், சனாதன தர்மத்தில், பெண்கள் இழிபடுத்தப்படவில்லை என்றார். பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க லோக்சபா குழுவுக்கு உத்தரவிட கோரியதை கேட்ட நீதிபதிகள், திருமாவளவன் மட்டும்தான் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். திருமாவளவன் மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும், அது 2 மாதத்தில் முடித்து வைக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறியதை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
Next Story