போஸ்டரில் புகைப்படம் - ரஜினி அறிவுரை
கட்சி போஸ்டர்களில் ரஜினிகாந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி போஸ்டர்களில் ரஜினிகாந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தொடங்குவது குறித்து கோடம்பாக்கத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் கட்சி போஸ்டர்களில் ரஜினிகாந்த், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் புகைப்படங்கள் மட்டும் இருக்க வேண்டும் எனவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் புகைப்படங்கள் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story