"அரசியலில் மிகச்சிறந்த நேர்மையாளர் எஸ்.ஆர்.ராதா" - எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு சைதை துரைசாமி இரங்கல்
முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்ணா காலம் தொட்டே அரசியலில் மிகச்சிறந்த நேர்மையாளராக பணியாற்றிய எஸ்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின் அன்பையும் மிகுந்த நம்பிக்கையையும் பெற்றவர் என அவர் நினைவுகூர்ந்துள்ளார். அவரின் மறைவு எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள், தொண்டர்களுக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும் என சைதை துரைசாமி குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஆர்.ராதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
Next Story