சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்கும் ஆணையம் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்கும் ஆணையம் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு, புள்ளி விவரங்களைத்திரட்டி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என குறிப்பிட்டுள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story