"யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி கட்சி தொடங்கிய பின் கருத்து கூறுகிறேன்" - ஸ்டாலின்
முதலமைச்சர் தமக்கு வழங்கிய "அறிக்கை நாயகன்" என்ற பட்டத்தை மனதார ஏற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் வேலை என தெரிவித்தார். தற்போது சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைத்திருப்பது, தேர்தல் நாடகம் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.
Next Story