மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற கோரி வழக்கு : மத்திய - மாநில மீன்வளத்துறைகள் பதிலளிக்க உத்தரவு
மீன்பிடி தடைக்காலத்தை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய - மாநில மீன்வளத் துறைகள், வானிலை ஆய்வு மையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு கில்நெட் மற்றும் லாங்லைன் டூனா விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வரதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மீன்பிடி தடைக்காலத்தை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக, கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற கோரி வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மத்திய - மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Next Story