சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசிகளை விற்பனை செய்ய கோரிக்கை - 180 சேகோ ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம்

சேகோ ஆலையில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிகளை சேலம் சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 180 சேகோ ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.
சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசிகளை விற்பனை செய்ய கோரிக்கை - 180 சேகோ ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம்
x
சேகோ ஆலையில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிகளை சேலம் சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 180 சேகோ ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 180 சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன, .
இங்கு மரவள்ளிகிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிகள் வடமாநிலங்களுக்கு அதிகளவில்  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில்,  சேகோ ஆலையில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிகளை இடைதரகர்கள் மூலம் விற்பனை செய்யாமல், சேலம் சேகோ சர்வ் மூலம் மட்டும் விற்பனை செய்தால் ஆலைகளுக்கு உரிய விலை கிடைக்கும் என ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஆலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்