"புயல் பாதிப்பு-விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,. அப்போது பேசிய கேபி அன்பழகன், இந்தியாவிலேயே குடிமராமத்து மற்றும் நீர் மேலாண்மை திட்டப்பணிகள் தமிழகத்தில் மட்டுமே சிறந்த முறையில் செயல்படுவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் என்று தெரிவித்தார்,. மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story