இந்தியாவில் டாப் 10 காவல் நிலையங்களின் பட்டியல் - சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் 2ம் இடத்தை பிடித்து சாதனை
இந்தியாவில் டாப் 10 காவல் நிலையங்களின் பட்டியலில் சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, மணிப்பூர் மாநிலம் தவுபாலில் உள்ள நாங்போக்செக்மை காவல் நிலையம் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் சேலம் நகரில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கர்சங் காவல் நிலையம் பிடித்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 16 ஆயிரத்து 671 காவல் நிலையங்களில் இருந்து சிறப்பாக செயல்படும் பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நலிந்த நபர்களுக்கு எதிரான குற்றங்கள்
மீதான நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போன நபர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்டவைகளை அளவுகோலாக வைத்து சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story