தமிழகத்தை நெருங்கி வரும் புரெவி புயல் - தூத்துக்குடி, திருச்சி, கொச்சி உள்ளிட்ட 12 விமான சேவை ரத்து

புரெவி புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய 3 விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தை நெருங்கி வரும் புரெவி புயல் - தூத்துக்குடி, திருச்சி, கொச்சி உள்ளிட்ட  12  விமான சேவை ரத்து
x
புரெவி புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய 3 விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் 2 விமானங்கள், திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்கள் என  மொத்தம் 4 விமான சேவைகளும்,  சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்குமான விமான சேவையும் ரத்து  செய்யப்பட்டுள்ளன. புரெவி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்