காத்திருப்பு பட்டியலில் உள்ள ஏழை மாணவர் விவகாரம்: "மருத்துவ இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ள ஏழை மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்துள்ளது.
காத்திருப்பு பட்டியலில் உள்ள ஏழை மாணவர் விவகாரம்: மருத்துவ இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
x
மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசானை வெளியிட்டது. கடலூரை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த  மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா வுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும், மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் கடந்த 20 ஆம் தேதி  தமிழக அரசு அறிவித்தது.

மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியாவுக்கு மருத்துவ இடம் வழங்கப்படாததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்