"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி
x
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்கி, இன்று அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுற்றுலா தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையிலான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்