கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்
x
காலை 9.30 மணி அளவில் போயஸ் வீட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் புறப்பட்ட ரஜினிகாந்த், சுமார் 2 மணி நேரம் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டார். அதில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிச்சயம், களம் காண வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய சூழலில், கட்சி தொடங்கினால் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டறிந்துள்ளார். சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளில், தனக்கு திருப்தி இல்லை என கூறிய ரஜினி, இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு முன்னேற முடியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
நிர்வாகிகள் சிலர் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் ரஜினி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்றும், மக்களுக்காக உழைக்க வேண்டும் எனவும் ரஜினி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் ரஜினி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்