பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 15 வயது சிறுமி: நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை வன்கொடுமை - 400-க்கும் மேற்பட்டவர்கள் சீரழித்த கொடூரம்
பதிவு : நவம்பர் 30, 2020, 08:32 AM
சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 15 வயது சிறுமி 400க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்தக் கொடூரம் பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் முடங்கிக் கிடந்த ஊரடங்கு காலத்தில், குழந்தைகளுக்கு எதிராக 13 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவானதாக, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் தகவல் வெளியிட்டது. 

இந்தத் தகவல் வெளியான அதேவேளையில், சென்னை வண்ணாரப்பேட்டையில், வக்கிர மனம் படைத்த மனித மிருகங்களால் சத்தமில்லாமல் சீரழிக்கப் பட்டிருக்கிறார் 15 வயது சிறுமி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாருக்குப் பிறகே, இந்தக் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

விசாரணையில் இறங்கிய போலீசார், இதில் மூளையாக செயல்பட்ட மதன்குமார், ஷகீதாபானு, செல்வி மற்றும் சந்தியா உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக பிரமுகரான ராஜேந்திரனும், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் கைது செய்யப்பட்டனர்.   

இதன்பிறகு வெளியான ஒவ்வொரு தகவலுமே, திடுக்கிடச் செய்தன. சிறுமியை நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்ததும், கடந்த சில மாதங்களில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக கிடைத்த பட்டியலில், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என சமூகத்தில் மதிக்கத்தக்க பொறுப்புகளை வகிப்பவர்கள் இடம் பெற்றிருப்பதுதான் வேதனையின் உச்சம். 

இதுதொடர்பான விசாரணையில், காவல்துறை தீவிரம் காட்டியுள்ள நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாகினும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு!

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

225 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

140 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

"2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்தை பரப்ப மத்திய அரசு 643 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தமிழுக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...

22 views

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

18 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

102 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

203 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.