ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் தளர்வுகள் அறிவிப்பு -கோவிலின் நான்கு வாசல்கள் வழியாகவும் செல்ல அனுமதி

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் தளர்வுகள் அறிவிப்பு -கோவிலின் நான்கு வாசல்கள் வழியாகவும் செல்ல அனுமதி
x
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், கோவிலின் நான்கு வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன், வயது வரம்பு கட்டுப்பாடும் அகற்றப்பட்டுள்ளது. இதுதவிர, திருமணம், துலாபாரம் போன்ற அனைத்து வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.45 முதல் 4.30 மணி வரையும், அதிகாலை 5.15 முதல் 6.15 வரையிலும், இதேபோல் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 6.10 மணி வரையிலும் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்